Common
Series name:
Philocine
– The Philosophical Aspect of Medicine
Book Series Name:
Understanding
Environmental Health Using
Ancient Tamil Literary
Work – Thirukkural
Specific
Title of the Book:
Heat Stress and Human
Brain
Journey to the
Frontiers of Psychosomatic Medicine
அத்தியாயம் – ஒன்று
மலர்: அனைவருக்கும் வணக்கம்.
அறியாள்: இன்றைய பயணத்தின்
பொழுது, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நம்மால் அறிந்துகொள்ள
முடியும் என்று எனது ஆசிரியர் நேற்று வகுப்பில் கூறினார்.
எழில்: ஆம், பல மாணவர்களுக்கு கிட்டாத
கடவுச்சீட்டு நமக்கு கிட்டியது நமக்கு நன்மையே.
இன்று நாம் இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயிலும் கல்விசார்ந்த உரையாடல்களை பதிவுசெய்து நாளை வகுப்பறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனது ஆசிரியர் கூறியுள்ளார்.
இன்று நாம் இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயிலும் கல்விசார்ந்த உரையாடல்களை பதிவுசெய்து நாளை வகுப்பறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனது ஆசிரியர் கூறியுள்ளார்.
மலர்: உரையாடலின் பகுதிகளை தாராளமாக நீங்கள் குறிப்பெடுத்து எழுதிக்கொள்ளலாம். அதற்கு தடை ஏதும் இல்லை, ஆனால் புகைப்படம் எடுக்கக்கூடாது, அது தவறு.
புரிகிறதா ?
ஆம் என்ற நிலையில் எழிலும், அறியாலும்
தலையை அசைத்து ஆமோதித்தனர்.
எழில்: சுற்றுப்புற சூழல் சார்ந்த அறிவியலில்
இன்று முக்கியமாக எந்த செய்தியை நாம் காணப்போகிறோம் ?
டாக்டர்: வெப்ப அழுத்தம் பற்றியும், அதிக வெப்ப அழுத்தம் எவ்வாறு மனித மூளையின் செயல்பாடுகளை பாதிக்கிறது என்பது பற்றிய செய்தியையும் இன்று காணப்ப்போகிறோம்.
தமிழறிஞர்: முழுவதுமாக கூறுங்கள், இந்த செய்திகளை எவ்வாறு திருக்குறள் மூலமாக அறிந்துணர்வது என்ற செய்தியையும் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
அறியாள்: வெப்ப அழுத்தம் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் ?
அது ஆய்வு செய்யும் அறிஞர்கள் மட்டும் புரிந்துணர வேண்டிய செய்திதானே ?
டாக்டர்: அவ்வாறு தவிர்த்தல் தவறு,
வெப்ப அழுத்தம் என்பது சமீபத்திய
காலங்களில் சுற்றுப்புற சூழல் மருத்துவம் (Environmental
health) துறையில் ஆய்வாளர்களால் மிக அதிக முக்கியத்துவத்துடன் ஆராயப்படும் பகுதியாகும்.
மருத்துவர்களுக்கு வெப்ப அழுத்தம் பற்றிய ஞானம் மிக அவசியமாகும்.
ஏனெனில் வெப்ப அழுத்தம் காரணமாக துன்புரும் நோயாளிகளுக்கு சரியான அளவினில் நிலையினில் வைத்தியம் செய்ய வேண்டியது
அவசியமாகிறது.
மேலும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் பல்வேறு பகுதிகளை சென்று காணும் பொழுது எனது கூற்றின் முழுமையான தெளிவையும் உங்களால் அறிந்துணர முடியும்.
தமிழாசிரியர்: விழிப்புணர்வு வேண்டும்
என்று கூறுகையில், தயவு செய்து வெயிலில் உழன்று வேலை செய்யும் கூளித் தொழிலாளி தெளிவு பெற வேண்டும், என்பதயும் நினைவில் நிறுத்துங்கள்.
ஏனெனில் அவர்கள் தெளிவு பெறாத வரை நமது முயற்சிகள் அனைத்தும் ஒரு வகையினில்
தோல்வி என்றே கருதல் வேண்டும்.
பாமர மக்கள் புரிந்துகொள்ளும் வகையினில் நமது ஆய்வுகளின்
விளக்கம் அமைதல் வேண்டும்.
மலர்: உண்மையிலேயே இது ஒரு யதார்த்தமான சிந்தனையாகும்.
பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து ஆய்வுகளை செய்வதால் என்ன பயன் ?
அடித்தட்டு மக்களை சென்று அடையாத அறிவியலால்
என்ன பயன் ?
அறியாள்: அதுதான் அடித்தட்டு என்று நீங்களே சொல்கிறீர்கள், அந்த தட்டு கற்று என்னவாகப்போகிறது ?
அதை தட்டிவிட்டுச் சென்றால் என்ன குற்றம் ?
தமிழறிஞர்: பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வகையினில் அவர்களுக்கு அறிவியல் செய்திகளை எடுத்து இயம்ப முடியாதது அறிஞர்களின் குறைவான திறனை விளக்குவதாக உள்ளது, என்பதை முதலில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களை தள்ளிவிட மட்டும் நினைக்காதீர்கள் – அது சமூக குற்றம்.


No comments:
Post a Comment